நாளை முதல் நமது கொடி நாடெங்கும் பறக்கும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு இனி சிறக்கும் எனவும் தெரிவித்துள்ளார். நம் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகம் ஆகும் நாள் ஆக.22. பாடலும் வௌியிடப்படும் . என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே என அழைத்து கட்சி கொடி தொடர்பாக அறிவிப்பு வௌியிட்டார் விஜய்.