Skip to content

ஜெகன் ஆபீசில் ‘முட்டை பப்ஸ்’ க்கு மட்டும் ரூ.3.6 கோடி செலவு..

  • by Authour

சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றார். ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்த தகவல்களை ஒவ்வொன்றாக தெலுங்கு தேசம் வெளிட்டு வருகிறது. முதல்வராக இருந்தபோது ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக ரிஷிகொண்டாவில் அரண்மனை போன்ற ஒரு கட்டடம் கட்டியது, அவரது குடும்பத்தினருக்கு அதிக அளவு பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்புவது, அவர்கள் விரைவாக பயணம் செய்வதற்கு சிறப்பு விமானங்கள், விடுமுறைகளை கொண்டாடுவதற்கு ஹெலிகாப்டர்கள் என அரசு பணத்தை பயன்படுத்தியதாக என ஜெகன்மோகனுக்கு எதிராக தெலுங்கு தேசம் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது.  அந்த வகையில் தற்போது ‘முட்டை பப்ஸ் ஊழல்’ என்ற ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். ஜெகன்மோகன் முதல்வராக இருந்த 2019 முதல் 2024 வரையிலான 5 ஆண்டுகளில் அவரது முதல்வர் அலுவலகத்திற்கு ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ் வாங்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை தெலுங்கு தேசம் வௌியிட்டுள்ளது.  அதாவது, ஆண்டுக்கு சராசரியாக ரூ.72 லட்சத்திற்கு முட்டை பப்ஸ்க்காக செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 993 முட்டை பப்ஸ்கள் என ஐந்து ஆண்டுகளில் சுமார் 18 லட்சம் முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளதாக பில்கள் அடங்கிய புகைப்படங்களை தெலுங்கு தேசம் கட்சியினர் இணையத்தில் வைரலாக பரப்பினர். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜெகன்மோகன் கட்சி, எங்களுக்கு எதிராக பரப்பப்படும் ‘போலி பிரசாரம்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!