முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலராக இருந்த முருகானந்தம், தலைமை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதைதொடர்ந்து, முதல்வரின் செயலர்களின் பணிப்பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல்வரின் முதல் தனி செயலராக உமாநாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு, மின்சாரம், நிதி, உள்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி, பொது, தொழில், நகராட்சி நிர்வாகம், நீர்வளம் உள்ளிட்ட துறைகள், விஜிலென்ஸ் கமிஷன் போன்றவை ஒதுக்கப்பட்டு உள்ளன. இரண்டாவது தனி செயலராக சண்முகம் நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு, வேளாண்மை, கூட்டுறவு, உணவு, உயர்கல்வி, வீட்டுவசதி, மனிதவளம், சட்டம், சட்டசபை, வருவாய், ஊரக வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி, ஹிந்து அறநிலையம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. முதல்வரின் அலுவலக நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பும், இவரிடம் தரப்பட்டுள்ளது. முதல்வரின் மூன்றாவது செயலராக அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு, எஸ்.சி., – எஸ்.டி., நலம், கால்நடை பராமரிப்பு, பி.சி.,-எம்.பி.சி., நலம், சுற்றுச்சூழல், மக்கள் நல்வாழ்வு, குறு, சிறு தொழில்கள், பள்ளி கல்வி, சமூகநலம், மாற்றுதிறனாளிகள் நலம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அரசியல் தொடர்பில்லாத முதல்வரின் சந்திப்புகள், சுற்றுப்பயண ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பும், இவரிடம், கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது. இணை செயலராக நியமிக்கப்பட்டு உள்ள லட்சுமிபதிக்கு, கைத்தறி, தகவல் தொழிற்நுட்பம், தொழிலாளர் நலன், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், திட்டம் மற்றும் வளர்ச்சி, சமூக சீர்த்திருத்தம், சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.