Skip to content
Home » திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

திருச்சி மாநகராட்சியை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது.  திருச்சி மாநகராட்சி 17,19,20 ஆகிய வார்டுகளில் கடந்த சில நாட்களாக சாக்கடை கலந்த கழிவு நீர் குடிநீருடன் கலந்து அதனை பொதுமக்கள் குடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு மஞ்சள்காமாலை, காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் இறந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்குக் காரணமான விடியா திமுக அரசையும், திருச்சி மாநகராட்சியையும் கண்டித்து, இன்று திருச்சி, மரக்கடை, எம்ஜிஆர் திடலில், அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ப.மோகன் தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் முன்னிலையில், நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,

திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டு, செயல்படுத்தப்பட்ட

திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் விடியா திமுக அரசை கண்டித்தும், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், உயர்த்தப்பட்டுள்ள பல்வேறு வரிகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ , தேமுதிக மற்றும் வியாபார சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்றுள்ளனர். இதில் அதிமுக அமைப்பு செயலாளர்கள், ரத்தினவேல், மனோகரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், வழக்கறிஞர் முல்லை சுரேஷ், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!