Skip to content
Home » வந்தவுடன் வார்டு மீட்டிங் … அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஸ்பீடை பார்த்து காங்கிரஸ் உற்சாகம்..

வந்தவுடன் வார்டு மீட்டிங் … அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஸ்பீடை பார்த்து காங்கிரஸ் உற்சாகம்..

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா கடந்த ஜன.4-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.  காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலையும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 18-ம் தேதி அறிவித்தது. அதன்படி, பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் போட்டியிடுவதாக இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இடைத்தேர்தல் பணிக்காக திமுக சார்பில்  கே.என்.நேரு, எஸ். முத்துசாமி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், வி. செந்தில்பாலாஜி, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், அர.சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ், அந்தியூர் செல்வராஜ், கோவை நா. கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி, க.வசந்தம் கார்த்திகேயன், தா.உதயசூரியன், சேலம் ஆர். ராஜேந்திரன், டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம், என். நல்லசிவம், இல. பத்மநாபன், பா.மு.முபாரக், தே.மதியழகன், கே ஆர்.என் ராஜேஸ்குமார், எஸ்.எம். மதுரா செந்தில், பெ.பழனியப்பன், ஒய்.பிரகாஷ், திருப்பூர் செல்வராஜ், ஐ.பி.செந்தில்குமார், தடங்கம் சுப்ரமணி உள்ளிட்ட  குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 22ம் தேதி அமைச்சர்கள் கேஎன் நேரு, முத்துசாமி ஆகியோர் துவக்கினர். இந்த நிலையில் திமுக தேர்தல் பணிக்குழுவைச் சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ஈரோடு வந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர் திமுக அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் ஈரோடு மாநகராட்சியின் 25வது வார்டுக்கு சென்ற அமைச்சர் செந்தில்பாலாஜி அங்கு திமுக மற்றும் காங்கிரஸ் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகளுடன் முதற்கட்ட ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது எத்தனை பூத், எவ்வளவு வாக்காளர்கள்? ஆண்கள் பெண்கள்? என அடுத்தடுத்து விபங்களை கேட்டு குறித்துக்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையும் வேண்டும் என கேட்டு வாங்கினார்.  வந்தவுடன் வார்டு மீட்டிங் என தேர்தல் பணியினை துவக்கிய அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஸ்பீடை பார்த்து காங்கிரசார் உற்சாகமாகியுள்ளனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *