அரியலூர் மாவட்டம் தத்தனூர் அருகே உள்ள மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறையின் சார்பில் 185- வது உலக புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் வழக்கறிஞர் எம்.ஆர். இரகுநாதன் தலைமை தாங்கினார். இயக்குனர் முனைவர் ஆர்.ராஜமாணிக்கம் சிறப்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் சங்கீதா வாழ்த்துரை
வழங்கினார். முன்னதாக துறைத்தலைவர் சிலம்பரசன் வரவேற்புரையாற்றினார். மேலும் Online Mobile Photography Competition நடைபெற்றது. இப் போட்டியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புகைப்படங்களை பதிவு செய்தனர்.
இப்போட்டியில் தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி காட்சி தொடர்பில் துறை மாணவர் ஆலன்சந்துரு முதல் பரிசு-3000, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவி சுபாஷ் சைன் இரண்டாம் பரிசு-2000, திருச்சி பிசப் ஷீபர் கல்லூரி மாணவர் சண்முக பிரசாத் மூன்றாம் பரிசு-1000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் கார்த்திக் நன்றியுரை ஆற்றினார்.