தஞ்சை, பாப்பாநாட்டில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 17வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் அன்றைய தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். விசாரணையில் அப்பெண் இச்சம்பவம் குறித்து போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணின் புகாரை ஏற்காமல் அலட்சியப்படுத்திய பெண் எஸ்ஐ சூர்யாவை சஸ்பெண்ட் செய்து டிஜிபி ஆணை பிறப்பித்துள்ளார். நேற்று பெண் எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றபட்ட நிலையில் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
