தஞ்சாவூர் அருகே வல்லத்தை சேர்ந்த ஜேன்ஜோசப் என்பவரின் மகன் விகாஷ்தனராஜ் (43). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூருக்கு வந்தார். பின்னர் வ.உ.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனை எதிரில் தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விகாஷ் பல இடங்களில் தேடிப்பார்த்தும் பைக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து விகாஷ் தஞ்சாவூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
