மமக திருச்சி மேற்கு மாவட்ட தலைமை பொதுக்குழு கூட்டம். மமக பொது செயலாளர் அப்துல் சமது MLA பங்கேற்பு!!!மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் பீமநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC தலைமை தாங்கினார். தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் வரவேற்பு உரையாற்றினார். IPP மாநில துணை செயலாளர் முகமது ரபீக் தொடக்க உரை ஆற்றினார்.
மமக பொது செயலாளர் அப்துல் சமது MLA, தமுமுக மாநில பொருளாளர் Er ஷபியுல்லாஹ் கான், துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா, மாநில அமைப்பு செயலாளர் புழல் ஷேக் முகமது ஆகியோர் நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் நடத்தி, வரும் காலங்களில் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பண்புகள் குறித்து உரையாற்றினார்கள்.
தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், IT Wing மாநில துணை செயலாளர் நஜீர், SMI மாநில துணை செயலாளர் அப்பீஸ், விழி அமைப்பின் மாநில துணை செயலாளர் முஸம்மில் கான் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் தீர்மானங்களை முன் முன்மொழிந்தனர், மாவட்ட துணை செயலாளர் அசாருதீன் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1 கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறு வரையறை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குளறுபடிகளை செய்து உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள வார்டு மறு வரையறை குழு அனைத்து பிரிவு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் சமூக நீதியை காக்கும் வகையில் வார்டு மறு வரையறை மேற்கொள்ள வேண்டும் என இந்த பொதுக்குழு மூலம் கேட்டு கொள்ளப்பட்டது.
2. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீரில் மாசு ஏற்பட்டு மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களால் பொது மக்கள் வெகுவாக பாதிப்படைந்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மாசு இல்லாத குடிநீர் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பொதுக்குழு மூலம் கேட்டு கொள்ளப்பட்டது
3. திருச்சி மாநகர போக்குவரத்து காவல் துறையினர் சாலை ஓரம் நிற்கும் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை எல்லாம் புகைப்படம் எடுத்து உயர் அதிகாரிகளுக்கு கணக்கு காட்ட வேண்டி ரூபாய் 3000, 5000, 10,000 என அபராதம் விதிக்கின்றனர். வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் எளியவர்களும் கூலி
வேலை பார்க்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் இதனால் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இப்பிரச்சினை பலமுறை காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இப்போக்கு மாறவில்லை. மாநகர காவல் ஆணையர் அவர்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இப் பொதுக்குழு கேட்டு கொள்கிறது. இந்நிலை மேலும் தொடர்ந்தால் மாநகர காவல்துறையை கண்டித்து மமக போராட்டம் நடத்தும் என இப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.
4. திருச்சி மாநகர் புறநகர் என அனைத்து பகுதிகளிலும் போதை பொருட்கள் அதிகரித்து இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் வெகுவாக பாதிப்படைந்து வருகின்றனர். இதற்கு போர்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்தபொதுக்குழு கேட்டு கொள்கிறது.
5. தென்னூர் ஆழ்வார் தோப்பு பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு குழுமிகரை பகுதியில் ‘அடக்கஸ்தலம்’ கோரி மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இப்பகுதியில் ‘அடக்கஸ்தலம்’ அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பொதுக்குழு கேட்டு கொள்கிறது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அண்ணாநகர் பகுதி நிர்வாகிகள் அப்துல் நாசர், தென்னூர் சதாம், காஜா, மாவட்ட நிர்வாகிகள் முபாரக், பக்ரூதீன், இலியாஸ், ஜீபைர் ஆகியோர் பொதுக்குழு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.