தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி அருகில் பிரண்ட் ட்ராக் கால் டாக்சி நிறுவனத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு, பிரண்ட் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. மேலும் இந்த அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவும் நடந்தது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் சதீஷ் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு
சிறப்புரையாற்றி ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார். பிரண்ட்ஸ் தொண்டு நிறுவனத்தை மகாராஜா குழும சேர்மனும், லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநருமான முகமது ரஃபி தொடக்கி வைத்தார்.
கௌரவ விருந்தினர்களாக கனரா வங்கி துணை பொது மேலாளர் ஆனந்த் தோத்தாத், சாப்ட் ஸ்கில் டிரெய்னர் ஸ்டாலின் பீட்டர் பாபு, சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் மணிமாறன், தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் ராஜ சீனிவாசன், காஸ்மோஸ் ரோட்டரி கிளப் தலைவர் தர்மராஜா மற்றும் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் சினேகம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் முகமது மசூது நன்றி கூறினார்