2026ம் ஆண்டு தேர்தல் அரசியலில் குதிக்க இருக்கும் நடிகர் விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநில மாநாட்டை அடுத்த மாதம் நடத்துகிறார். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. மாநாட்டுக்கு முன் கட்சியின் கொடியை அறிமுகம் செய்வதில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக பலதரப்பட்ட வண்ணங்களுடன் 3 மாடல்களில் கொடிகள் தயாரித்து விஜயிடம் காட்டப்பட்டது. அதில் சில சிறிய மாற்றங்களை செய்யலாம் என விஜய் ஆலோசனை கூறினாராம்.
அதன்படி புதிய கொடி தயாராகி விட்டது. அந்த கொடியில் சிவப்பு, நிறம் கண்டிப்பாக இருக்
கும் என்று கூறப்படுகிறது. அந்த கொடியில் ஒரு பூ இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது. கொடியின் அறிமுக விழா வரும் 22ம் தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. இதில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து கொடிக்கான விளக்கங்களையும் நடிகர் விஜய் அளிக்க உள்ளார்.