அரியலூர் மாவட்டம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மனகெதியில் உள்ள சுங்கச்சாவடியில் செந்தில்குமார் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணி உதவி ஆய்வாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், மனகெதி கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான வயலில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியை, மர்ம நபர்கள் அகற்றி சுருட்டி கொண்டிருந்தபோது, செந்தில்குமார் என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனையடுத்து மூவரும் இரும்பு வேலியை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இது குறித்து செந்தில்குமார், உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மனகெதியை சேர்ந்த கனகராஜ், மணிகண்டன், கார்த்திகேயன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மூன்று பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
