அரியலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் பேரணி ஆர்ப்பாட்டம்.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் 2-ம் ஆண்டு மருத்துவ மாணவி கொடூரமாக கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை மேற்கு வங்க அரசு உடனடியாக கைது செய்யக்கோரி இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று நீதி கேட்டு
பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருத்துவ மாணவியின் மரணத்திற்கு உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மத்திய ,மாநில அரசுகள் மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மருத்துவரின் பாதுகாப்பிற்கான தனி சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மருத்துவ கல்லூரியில் இருந்து ஊர்வலமாக வந்த நூற்றுக்கணக்கான மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் முன்பாக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவரின் வெள்ளை கோட்டில் ரத்தக் கரைகள் படிவதை தடுக்குமாறு ரத்தக்கரை படிந்த கோட்டை ஏந்தியும், பெண்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு இல்லையா, ஏன் இந்த மிருக செயல் தொடர்கிறது என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் ஊர்வலமாக வந்தனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் வழி நெடுகிலும் ஆர்ப்பாட்டத்தின் போதும் ஒரு சேர கோரசாக வி வான்ட் ஜஸ்டிஸ் என்று கோஷத்தைகளுக்கு தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.