இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் கூறுகையில், சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர்களுக்கு, மரபுப்படி முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும். ஆனால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுக்கும் ஐந்தாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது, மரபுகளை மீறும் செயல், என்றார். இந்த விவகாரம் தொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், அவர்களுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இதனால், அரசியல் தலைவர்களுக்கு ஐந்தாவது வரிசையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், எந்த விதிமீறலும் இல்லை என, குறிப்பிட்டுள்ளது.