Skip to content
Home » கிராம சபைக்கூட்டத்திற்கு தாமதாமாக வந்ததால்…. பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்த கலெக்டர்..

கிராம சபைக்கூட்டத்திற்கு தாமதாமாக வந்ததால்…. பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்த கலெக்டர்..

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், மணவாடியை அடுத்துள்ள மருதம்பட்டி காலனியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, மணவாடி பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

காலை 11.30 மணியளவில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அப்பகுதி சுற்று வட்டார பொதுமக்களும், சட்டமன்ற உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட மக்கள்

பிரதிநிதிகள், அனைத்து துறை அதிகாரிகள் வருகை தந்து காத்திருந்தனர். மதியம் 12 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கூட்டம் தொடங்கியது. அப்போது தலைமையுரை ஆற்றிய மாவட்ட ஆட்சியர் தங்கவேல் காலதாமதமாக வருகை தந்ததற்கு அங்கு காத்திருந்த பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கொடியேற்றுதல் நிகழ்வில் பங்கேற்று விட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கி விட்டு வருகை தந்ததால் காலதாமதம் ஏற்பட்டதாகவும், தனக்காக காத்திருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தனது உரையை தொடங்கி பேசினார்.

முன்னதாக அப்பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!