பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கூறி விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது.
தொடர்ந்து மூன்று முறை அவரது மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 14), வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.