திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் J.சீனிவாசன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் எடப்பாடியார் வரும் 18.8.2024, ஞாயிற்றுக்கிழமை மணப்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.சந்திரசேகர் அவர்களின் இல்ல நிகழ்ச்சிக்கு வருகை தருகிறாா். விமானம் மூலம் திருச்சி வரும் எடப்பாடியாருக்க ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.