பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திரத்திருநாள் விழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்றுநடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் , அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா ,மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் .ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களையும், தேசிய கொடி நிறத்திலான பலுான்களையும் பறக்கவிட்டனர். 374 பயனாளிகளுக்கு ரூ.3.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து, காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் கிரேஸ் வழங்கினார். அதைத்தொடர்ந்து போலீசாரின் பிரமாண்ட அணிவகுப்பும் நடந்தது. அவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.
விழாவில் குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, லெப்பைக்குடிக்காடு பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமாந்துறை புனித ஆன்ட்ருஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் ஸ்ரீகௌதம புத்தர் சிறப்பு உயந்நிலைப் பள்ளி, பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆகிய 6 பள்ளிகளிலிருந்து சுமார் 600 மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் .சு.கோகுல் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் .சு.தேவநாதன், நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) .வைத்தியநாதன் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.