78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக தலைமை அறிவுறுத்தலின் பேரில் சுதந்திர தின விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணி செல்ல முயன்ற போது காவல்துறையினர் கொடியை வாகனம் முன்பு கட்டி செல்லக்கூடாது எனவும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனப் பேரணி செல்லக்கூடாது என்று கூறிய போது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பாஜக நிர்வாகிகள் தேசியக் கொடியை
கையில் ஏந்தியவாறு இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணியில் 50க்கும் மேற்பட்டோர் சென்றனர்.
இதில் திருக்காம்புலியூர் ரவுண்டானா வழியாக பேருந்து நிலையம், ஜவகர் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று சுபாஷ் சந்திர போஸ் சிலை மற்றும் கொடிகாத்த குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு பேரணி நிறைவடைந்தது.