தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மகப்பேறு காலங்களில் குழந்தைகள் இறப்பு குறித்து சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை ஆரோக்கியமாக பேணிக் காப்பது குறித்து சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) மரு.ராமசாமி , இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.செல்வகுமார் , துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.அன்பழகன் , மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கலைவாணி, மகப்பேறு துறைத் தலைவர் மரு.இராஜேஸ்வரி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கு திட்ட இயக்குநர் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் இராஜேஸ்வரி மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.