தமிழக நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளில் நகராட்சிகளாக தரம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாக்குவதற்கான மக்கள் தொகை 30 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்ற அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும், சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது.
இந்த 3 பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம் வணிகம் போன்ற தொழில் பெருக்கத்தை கருத்தில் கொண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச முடிவு செய்து அவ்வாறே ஆணையிடப்படுகிறது.இதையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 12-ம்தேதி இதற்கான உத்தரவுகளை முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
தஞ்சை மாவட்டத்தில் தற்போது பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் ஆகிய இரண்டு நகராட்சிகள் இருந்தன. தற்போது திருவையாறையும் சேர்த்து 3 நகராட்சிகள் ஆனது. தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே தஞ்சை, கும்பகோணம் ஆகிய 2 மாநகராட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.