பீகாரில் உள்ள கிழக்கு சம்பரன் மாவட்டத்தில், பல்கலைக்கழக விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அந்த மாநிலத்தின் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் வருகை தந்தார். கவர்னர் வருகையின்போது ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அந்த வகையில், காந்தி மைதான் பகுதியில் காவலர் ஒருவருக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த காவலரோ, தனது மகனை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைத்துள்ளார். தனது தந்தையின் சீருடையை அணிந்தவாறு காவல் பணிக்கு சென்ற அந்த இளைஞர், அது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த விவகாரம் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றது. இதையடுத்து, கவர்னர் வருகையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.