வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இதனால் அந்த நாட்டு அதிபர் சேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியா வந்து தஞ்சடைந்துள்ளார். இ்நத நிலையில் 2 தினங்களுக்கு முன் வங்க தேசத்தில் நடந்த கலவரத்திற்கு அமெரிக்காவின் தூண்டுதல் தான் காரணம் என சேக் ஹசீனா கூறியதாக தகவல் வெளியானது. மறுநாள் அவரது மகன் இதனை மறுத்தார்.அதில் தனது தாயார் அப்படி ஒரு கருத்தை வெளியிடவில்லை என கூறியிருந்தார்.
இந்த நிலையில் சேக் ஹசீனாவின் கருத்துக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளி்கை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறியதாவது: எங்களுக்கும் வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள்தான் காரணம் என சொல்வது முற்றிலும் பொய் என கரீன் ஜீன் பியர் கூறியுள்ளார்.