இந்தியாவின் சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில் சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் செயலில் அந்திய சக்திகள் நாசவேலையில் ஈடுபடாமல் தடுக்கவும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதையொட்டி விமான நிலையம், ரயில்நிலையம், முக்கிய பஸ் நிலையங்கள், கோவில்கள், மார்க்கெட்டுகளில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த வகையில் திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர்.
ஒவ்வொரு ரயிலிலும் வரும் பயணிகளையும், பயணிக்கும் பயணிகளின் உடமைகளையும் போலீசார் சோதனை போட்டு வருகிறார்கள். பார்சல்கள், பைகளில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்துகிறார்கள்.