Skip to content

தமிழக அளவில் 78 ஆயிரம் மாணவ,மாணவிகள் யோகாவில் சாதனை….

  • by Authour

தெக்கலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி சர்வதேச பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பத்மாசனத்தில் அமர்ந்தபடி 78 விநாடிகள் இரு கைகளிலும் தேசிய கொடியை உயர்த்தி பிடித்து யூனியன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்..

நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 240 மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 78 ஆயிரம் மாணவ,மாணவிகள் யோகாவில் புதிய உலக சாதனை செய்துள்ளனர்..

யோவா யோகா அகாடமி சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், தெக்கலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளும் கலந்து கொண்டனர். சுமார் ஐந்து வயது முதலான குழந்தைகள் முதல்

கலந்து கொண்ட இதில்,பத்மாசனத்தில் அமர்ந்த படி இரு கைகளிலும் தேசிய கொடியை உயர்த்தி பிடித்து 78 விநாடிகள் தொடர்ந்து அமர்ந்து வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்..

சாதனை நிகழ்வை கண்காணிக்க யூனியன் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் அமெரிக்காவில் இருந்து நேரடியாக வந்து சாதனை நிகழ்வை பார்வையிட்டார்.

பத்மாசனத்தில் அமர்ந்த மாணவ,மாணவிகள் தேசிய கொடியை பிடித்து உற்சாகமாக அசைத்தபடி யோகா செய்த இந்த சாதனை வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது..

தொடர்ந்து உலக சாதனை அங்கீகாரத்திற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழா,பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..

இந்நிகழ்ச்சியில்,ஸ்ரீ சக்தி சர்வதேச பள்ளியின் தாளாளர் தீபன் தங்கவேலு மற்றும் யோவா யோகா அகாடமியின் இயக்குனர் வைஷ்ணவி ஆகியோரிடம் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்…

தமிழக அளவில் உலக சாதனை நிகழ்வாக நடைபெற்ற இதில், கோவை மாணவ,மாணவிகளும் கலந்து கொண்டதை பள்ளியில் பயலும் சக மாணவர்கள் ஆசிரியர்கள்,பொதுமக்கள் என பலரும் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!