அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மேலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆறு ஏழு எட்டு ஆகிய வகுப்புகளில் 130 மாணவர்கள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே இப்பள்ளியில் அறிவியல் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவர்களின் கல்வி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து பற்றாக்குறை உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பள்ளி நிர்வாகத்தில் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்ப பள்ளி மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று விளம்பர பதாககளை ஏந்தி விடியா அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் மாணவர்களிடம் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர். ஆனாலும் மாணவர்கள் ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பின்னர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக பள்ளிக்கு வரும்படி அறிவுறுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தால் பள்ளி வளாகம் முன்பு போலீசார் குறிக்கப்பட்டதால் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும் உடனடியாக பணியிடங்களை நிரப்பாவிட்டால் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் எனவும் விடியா அரசுக்கு எதிராக எச்சரித்துள்ளனர். மாணவர்கள் நடத்திய இப்போராட்டம் ஆண்டிமடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.