சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற நாட்களில் அன்று இரவு தமிழ்நாடு கவர்னர் , தனது மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பார். இதில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்பார்கள். வழக்கம்போல இந்த ஆண்டு வரும் 15ம் தேதி கவர்னர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், கவர்னரின் செயல்பாடுகள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழக அரசுக்கு எதிராக உள்ளது. மேலும், பதவி காலம் முடிந்தபிறகும் கவர்னர் ரவி பதவியில் நீடிக்கிறார். ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாடு மக்களுக்கு எதிராகவே உள்ளது. எனவே அவர் அளிக்கும் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று கூறி உள்ளார்.
இதுபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா. முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கூறி உள்ளார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும், மதிமுகவும், விசிக, மமக ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.