Skip to content
Home » பொள்ளாச்சி அருகே குளவி கொட்டி 5 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி….

பொள்ளாச்சி அருகே குளவி கொட்டி 5 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி….

கோவை,ட்பொள்ளாச்சி அடுத்த விவசாய பண்ணை தோட்டக்கலை துறை வளாகத்தில் தென்னங்கன்று களை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த குளவிக்கூடு கலைந்தது. இதனை அடுத்து பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சுற்றி வளைத்து குளவி தாக்கியதாக தெரிகிறது. இதில் அங்கு பணிபுரிந்த 5 பெண்கள் குளவியின் தாக்குதலுக்கு உள்ளாகி உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களும் கோட்டூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!