கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் அமிர்தானந்தம். பேரூராட்சி சார்பில் நடைபெறும் பணிகள் தரம் இல்லாததாகவும், தொடர்ந்து பல்வேறு முறைகேடு நடைபெற்று வருவதாக ஒப்பந்தாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முதல்வர் தனிப்பிரிவு, கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை தலைவர்
உட்பட பல்வேறு இடங்களில் மனு அளித்துள்ளார். இது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால்
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் உயிருக்கு பாதுகாப்பு வேண்டுமென்று முகத்தில் கருப்பு மையை பூசிக்கொண்டு நூதன முறையில் வந்து மனு அளித்தார்.
மேலும், கடந்த 15/7/2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மனு அளித்தபோது, உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். தன்னை கொலை செய்ய குற்றம் சாட்டப்பட்டவர்கள் திட்டம் தீட்டி வருவதாகவும், உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்