கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்பொழுது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கொசூர் சந்தை பகுதியில் சேர்ந்த வயதான தம்பதிகளான தமிழரசி மற்றும் அவரது கணவர் ராஜவேல் மனு அளிக்க வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த
அவர்களில் கணவர் ராஜவேல் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் அவர்களுக்கு அவருக்கு தண்ணீர் கொடுத்து அவரை நிதானத்திற்கு கொண்டு வந்தனர்.
அப்பொழுது ராஜவேலின் மனைவி தமிழரசி கொசூர் பகுதியில் வசித்து வருவதாகவும், தனது மகளுக்காக சிறிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்து அதில் தாங்களும் வசித்து வருவதாகவும் திடீரென்று மகளின் கணவன் ஆகிய தங்களை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் வீட்டை அபகரித்துக் கொண்டதாகவும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார்.
அப்பொழுது தமிழரசியும் திடீரென மயங்கி விழுந்தது பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது உடனடியாக அவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்