திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், வாளாடி 110/11கிவோ துணைமின் நிலையத்தில் வருகின்ற 14.08.2024 காலை 09.45 மணிமுதல் மாலை 4.00 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கீழ்க்காணும் பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காதுஎன அறிவிக்கப்பட்டுள்ளது. மின்விநியோகம் பெறும் பகுதிகளான… நகர், கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, T.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, எசனைக்கோரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, R.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண்கல்லூரி, ஆங்கரை (சரவணாநகர், தேவிநகர், கைலாஸ்நகர்) ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.