கோவை, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் நா. மூ. சுங்கம் பாலாற்று பாலம் அருகே கனரக வாகனம் ஒன்று கடந்து சென்றது.உயரம் அதிகமான கனக வாகனம் அப்பகுதியில் உள்ள வேப்ப மரத்தின் மீது உரசியதால் வேப்ப மரத்தின் கிளை ஒன்று பாதி முறிந்த நிலையில் சாலையில் தொங்கியது.இதனை கடும் சிரமத்தோடு அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் கடந்து சென்றனர். இந்நிலையில் அவ்வழியாக பகல் 12 மணிஅளவில் பயணித்த வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி தனது வாகனத்தில் இருந்து இறங்கி துரிதமாக செயல்பட்டு,முறிந்து தொங்கிய கிளையை தொண்டர்கள் உதவியுடன் முழுவதுமாக வெட்டி
அப்புறப்படுத்தினார்.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது .இது குறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் களத்தில் இறங்கி போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரக் கிளையை வெட்டிய எம்எல்ஏ அமுல் கந்தசாமிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.