சென்னையில் போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை காணொளி வாயிலாக தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் ஒளிபரப்பப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். தஞ்சாவூர் எம் பி முரசொலி, பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை, கோட்டாட்சியர் இலக்கியா, தாசில்தார் அருள் ராஜ், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அறிவுரைகள் வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி,
நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் உறுதிமொழியை அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பலகையில்ப கலெக்டர், எம்பி, எம்எல்ஏ, மற்றும் மேயர், துணை மேயர் ஆகியோர் கையெழுத்து இட்டனர்.