தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் பங்கேற்று போதை இல்லா தமிழ்நாடு உறுதிமொழியை வாசித்தார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.போதைப் பொருட்கள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள், அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா, உள்துறை செயலாளர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால், போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.