ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஒங்கோல் பகுதியைச் சேர்ந்தவர்கள் நித்திஷ் வர்மா(21), சேத்தன்(21), ராம்கோமன்(21), யுகேஷ்(21), நித்திஷ்(21), சைதன்யா(21), விஷ்ணு(21) இவர்கள் சென்னை காட்டாங்குளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். தொடர் விடுமுறை காரணமாக கடந்த 9ம் தேதி ஊருக்கு சென்ற ஏழு பேரும் ஆந்திராவில் இருந்து நேற்று மாலை மீண்டும் கல்லுாரிக்கு, மாருதி எர்டிகா காரில் திரும்பினர். அவர்கள் பயணித்த கார், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரம் அடுத்த ராமஞ்சேரி அருகே வந்த போது, சென்னையில் இருந்து ராஜஸ்தான் சென்ற கன்டெய்னர் லாரி மீது கார் வேகமாக மோதியது. இதில், ஐந்து மாணவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். சைதன்யாவும், விஷ்ணுவும் படுகாயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த கனகம்மாசத்திரம் போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணி அருகே விபத்து.. எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் சாவு..
- by Authour

Tags:ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம்ஆந்திரா ஒங்கோல்எஸ்ஆர்எம் பொறியில் கல்லூரிதிருத்தணி அருகே விபத்து