சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் அறிக்கை… தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 14ம் தேதி வரை, தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் 30 – 40 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கன மழை பெய்யும். ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துார், கரூர், அரியலுார், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். அதேபோல் நாளை கோவை, தேனி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும். தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், விருதுநகர், மதுரை, திருச்சி, அரியலுார், பெரம்பலுார், சிவகங்கை, புதுக்கோட்டை, துாத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யும். 13ம் தேதி கோவை, தேனி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும். தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், பெரம்பலுார், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 14ம் தேதி கோவை, தேனி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு, ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கையும், கன மழை வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்சு அலெர்ட்’ எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளன.
15 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..
- by Authour
