கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பின்னர் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து வயநாட்டில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது… பாதிக்கப்பட்டவர்களுடன் துணை நிற்பது தான் முக்கிய பணி. பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு. தேவையான உதவிகளை
மத்திய அரசு செய்யும்.. நூற்றுக்கணக்கான மக்களின் கனவுகள் தகர்ந்துள்ளது. கேரளாவிற்கு தேவையான உதவிகள் விரைந்து வழங்கப்படும். நிலச்சரிவு பாதிப்பு குறித்து விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றார். குஜராத் பேரிடரின் போது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார் பிரதமர் மோடி.