கொடைக்கானல் அருகே ‘பார்பிகியூ’ சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்தனர். சின்னபள்ளம் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் 4 பேர் மது அருந்துவிட்டு பார்பிகியூ சிக்கன் சமைத்துள்ளனர். பார்பிகியூ சிக்கன் சமைத்த பின் அடுப்பை அணைக்காமல் ஜெயகண்ணன், ஆனந்த் பாபு ஆகியோர் உறங்கியுள்ளனர். மற்றொரு அறையில் இருந்த நண்பர்கள் காலை வந்து எழுப்பியபோது இருவரும் எழுந்திருக்காததால் ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆம்புலன்ஸில் வந்த செவிலியர்கள், இருவரையும் பரிசோதித்த நிலையில் உயிரிழந்ததாக கூறியதை கண்டு நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
