Skip to content
Home » வரதட்சணை கொடுமை…..மயிலாடுதுறை பட்டதாரி பெண்…கலெக்டரிடம் புகார்

வரதட்சணை கொடுமை…..மயிலாடுதுறை பட்டதாரி பெண்…கலெக்டரிடம் புகார்

மயிலாடுதுறை அருகே காளி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகள் பவித்ரா (23). பட்டதாரி பெண்ணான பவித்ராவிற்கும் சீர்காழி தாலுகா திட்டை கிராமம் சிவனார்விளாகம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஆனஸ்ட்ராஜ் என்கிற ரஞ்சித் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெற்றோர்களால் முடிவு செய்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

திருமணத்தின் போது 16 சவரன் நகை, புல்லட் பைக் மற்றும் 70 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை சீதனமாக கொடுத்து திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் திருமணம் ஆனதற்கு பிறகு பவித்ராவை கணவர் ரஞ்சித் மற்றும் உறவினர்கள் பல்வேறு முறையில் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் கணவரின் உறவினரான (திருமணம் ஆகாத)
ஊராட்சி மன்ற தலைவரை திருமணத்திற்கு முன்பே ரஞ்சித் காதலித்து வந்ததாகவும் தற்போது அவருடன் தொடர்பிலிருந்து கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் திருமணமாகி இரண்டு மாதத்திலேயே, தாலியை அறுத்துவிட்டு அடித்து துன்புறுத்தி தாய்வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.

மேலும் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்துடன் அரசு வேலை வாங்கித் தர வேண்டும், மாடி வீடு கட்டி தர வேண்டும் என வரதட்சணை கேட்டு என்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி கணவர் ரஞ்சித் மீது 14-1-2023 மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பவித்ரா புகார் கொடுத்துள்ளார். இதை கேள்விப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்
தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பவித்ராவையும் அவரது குடும்பத்தினரையும் காவல்துறையினர் மூலம் மிரட்டி வருகின்றனர். மேலும் போலீசார் என்னை மட்டும் விசாரித்து என் மீது நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்வதாக கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , தன் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் வந்து மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!