திரையுலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் மக்கள் நாயகனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். அவரது உருவத்தை நடிகர் விஷால் நெஞ்சில் பச்சை குத்தி கொண்டு உள்ளதாக படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது படத்திற்காக வரையப்பட்டதா? அல்லது உண்மையிலேயே அவர் பச்சை குத்திக்கொண்டரா? என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். எனவே இது அந்த படத்திற்கான விஷாலின் கெட்டப் என எதிர்பார்க்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.