தமிழ்நாடு காவல் துறையில் 24 கூடுதல் சூப்பிரெண்டுகள் பதவி உயர்வு பெற்று சூப்பிரெண்டுகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார். பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் வருமாறு:
கோவை விஜிலென்ஸ் செல் கூடுதல் எஸ்.பி. பி. மணிகண்டன் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு விஜிலென்ஸ் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை கூடுதல் எஸ்.பி. ெஜயசந்திரன், பதவி உயர்வு பெற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு (1) எஸ்.பியானார்.
கள்ளக்குறிச்சி கூடுதல் எஸ்.பி. குத்தாலிங்கம், சென்னை தியாகராய நகர் துணை கமிஷனரானார்.
மதுரை ஐகோர்ட் விஜிலென்ஸ் செல் ஏடிஎஸ்பி. விஜயகுமார், திருநெல்வேலி கிழக்கு துணை கமிஷனரானார்.
சென்னை ஸ்பெஷல் பிராஞ்ச் சிஐடி பிரிவு கூடுதல் எஸ்.பி. கார்த்திகேயன், சென்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பியானார்.
கிருஷ்ணகிரி கூடுதல் எஸ்.பி. சங்கு, பதவி உயர்வு பெற்று போச்சம்பள்ளி போலீஸ் பயிற்சி பள்ளி கமாண்டண்ட் ஆக நியமிக்கப்பட்டாார்.
நெல்லை குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி. வி. கார்த்திக், பழனி பட்டாலியன் கமாண்டண்ட் ஆனார்.
சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி. இனிகோ திவ்யன், சிவில் சப்ளை சிஐடி எஸ்பிஆனார்.
கடலூர் கூடுதல் எஸ்.பி. அசோக் குமார், கோவை மாநகர போக்குவரத்து பிரிவு துணை கமிஷனரானார்.
ராமநாதபுரம் கூடுதல் எஸ்.பி. அருண் மணிமுத்தாறு பட்டாலியன் கமாண்டண்ட் ஆனார்.
விழுப்புரம், விஜிலன்ஸ் கூடுதல் எஸ்.பி. தேவநாதன், சென்னை மேற்கு லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியானார்.
கோவை கூடுதல் எஸ்.பி. முத்துகுமார் பதவி உயர்வு பெற்று சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனரானார்.
திருவாரூர் கூடுதல் எஸ்.பி. ஈஸ்வரன், சென்னை சைபர் கிரைம் எஸ்பியானார்.
கள்ளக்குறிச்சி சைபர் கி்ரைம் கூடுதல் எஸ்.பி. கோமதி, சென்னை டிஜிபி அலுவலகஉதவி ஐஜியாக நியமிக்கப்பட்டார்.
நாகை ஏடிஎஸ்பி மீனாட்சி, பதவி உயர்வு பெற்று சென்னை சைபர் அரங்கம் எஸ்.பியானார்.
பெரம்பலூர் கூடுதல் எஸ்.பி. வேல்முருகன், சேலம் தெற்கு போலீஸ் துணை கமிஷனர் ஆனார்.
கடலூர் விஜிலென்ஸ் செல், கூடுதல் எஸ்பி. ஏ. முத்தமிழ், தமிழ்நாடு பால் கூட்டுறவு ஒன்றிய தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தாம்பரம் சைபர் கி்ரைம் கூடுதல் எஸ்.பி. ஜரீனா பேகம், பதவி உயர்வில் சென்னை சைபர் கிரைம் எஸ்.பியாக மாற்றப்பட்டார்.
சென்னை சிஐடி பிரிவு ஏடிஎஸ்பி ரமேஷ் கி்ருஷ்ணன், மதுரை தீவிரவாத தடுப்பு எஸ்.பியாக மாற்றப்பட்டார்.
ஆவடியில் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி. கீதா, எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று சேலம் மாற்றப்பட்டார்.
நாகை சைபர் கிரைம் ஏடிஎஸ்பி மகேஸ்வரி, எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக நியமனம்.்
மதுரை போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி மதுரை போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
நாமக்கல் கூடுதல் எஸ்.பி. கனகேஸ்வரி, பதவி உயர்வு பெற்று சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.