ஆகஸ்ட் 9 நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு என்று நம் தலைவர்கள் முழக்கமிட்ட இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் இன்று கார்ப்பரேட் கொள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு என்ற முழக்கமிட்டு தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற மத்திய பாஜக அரசு 51 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் 60% வேலை வாய்ப்பு உருவாக்கும் விவசாயத் துறைக்கு 1.5 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளதாகவும் இதனால் விலைவாசி உயரக்கூடும் மேலும் இதன் காரணமாக கார்ப்பரேட்டுகளுக்கு அதிக அளவு நிதியை ஒதுக்கி
ரேஷன் கடைகளை முடக்க நினைப்பதாகவும் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க கூடிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கினால் மட்டுமே சரியாக இருக்கும் ஆனால் 95 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது இதனை கண்டித்தும் கார்ப்பரேட் ஆதரவாக உள்ள சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் விவசாய உற்பத்தி பொருளுக்கு உரிய விலை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.