கேரள மாநிலம் வயநாடு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் கடந்த 11 தினங்களுக்கு முன் நிலச்சரி்வு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இன்னும் பலரை காணவில்லை. அந்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட மூரிக்காப்பு, குறிச்சியார்மலை உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் அந்த பகுதிகளுக்கு அதிகாரிகள் வி்ரைந்தனர். மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. தொடர்ந்து உயர் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
