கோவை, பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான காண்ட்ராக்டர் சக்தி குமார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.சக்தி குமார்க்கு சமத்தூரை சேர்ந்த கணேசமூர்த்தி, 2,50,000 ரூபாயும் கருப்பம்பாளையத்தை சேர்ந்த சாதிக் பாஷா ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும் மற்றும் ஆவல் சின்னாம்பாளையத்தை சேர்ந்த செந்தில்நாதன்க்கு 8,00,000 ரூபாயும் ஆகியோருக்கு பணம் கொடுத்ததாக தெரிகிறது. அப்பணத்தை திருப்பி கேட்டபோது
அம்மூவரும் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மன விரக்தி அடைந்த சக்தி குமார் தனது சாவிற்கு தன்னிடம் கடன் வாங்கி திருப்பி தராத மூவரும் தான் காரணம் என செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதனை வாட்ஸ் அப் மூலம் தனது உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு ராமர் கோயில் வீதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்து வந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார் சக்தி குமாரை மீட்டு பொள்ளாச்சி.அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.