திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நடுவர் கலப்பால் கடைவீதியில் இன்று காலை மாாிமுத்து என்பவரை 3 பேர் சரமாரி வெட்டிக்கொன்றனர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர். இவர் சில வருடங்களுக்கு முன்ன திமுக பிரமுகர் பாஸ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வந்திருந்தார்.
அவரை 3 பேர் வழிமறித்து வெட்டிக்கொன்றனர். பாஸ்கர் கொலைக்கு பழிக்கு பழியாக மாரிமுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாஸ்கரின் உறவினர்கள் தான் இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசார் கருதுகிறார்கள். இந்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.