அரியலூர் மாவட்ட பொது சுகாதாரத் துறை மூலம் யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர் அஜிதா அவர்களுடைய உத்தரவுப்படி அரியலூரில் புலம்பெயர்ந்த வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளிகளுக்கு இரவு நேரத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இரவு நேரங்களில் தான் இந்த இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும். மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் வகீல் ஆகியோர் முகாமினை மேற்பார்வையிட்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ மற்றும் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சைமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை அருள் பிரியன் உள்ளிட்ட சுகாதார ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். ஆய்வக நுட்புணர்கள் பணியாளர்கள் இரத்த மாதிரிகள் சேகரித்தனர். இம்முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள், கடுகூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படும். புதிய யானைக்கால் நோயாளிகள் கண்டறியப்பட்டால்
அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும்.தொடக்க நிலையிலே நோய் கண்டறியப்படுவதால், யானைக்கால் நோயால் ஏற்படும் உடல் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகின்றது. மேலும் நான்காம் நிலை யானைக்கால் நோயாளிகளுக்கு மாதம் ரூபாய் 1000 பராமரிப்பு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கை கால்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடல் ஊனத்தை தடுத்திட பராமரிப்பு உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படுகின்றது. அனைத்து ஆரம்ப அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.