திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் புனித ஜேம்ஸ் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் திருச்சியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் வழக்கம் போல் மதிய உணவு இடைவெளியின்போது வகுப்பறையில் தங்களுக்குள் விளையாடி கொண்டிருந்தனர். அந்த வகையில் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிரின்ஸ் (7) தனது வகுப்பில் விளையாடி விட்டு தனது இருக்கையில் போய் அமர்ந்தான். சில நிமிடங்களில் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்ததார்.. இதனை அடுத்து உடனடியாக அந்த மாணவன் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகம் கொண்டு சென்றது.
மருத்துவமனைக்கு சென்ற பின் மாணவன் முன்பே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர் பதறி அடித்து கொண்டு பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அதன் பின் மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவன் பிரின்ஸ் ஏற்கனவே இருதய சிகிக்சைக்கான மருந்துகள் எடுத்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தண்ணீர் குடித்து இறந்து விட்டதாக தகவல் வைரலானது. இந்த நிலையில் விளையாடி விட்டு வந்து அமர்ந்து மாணவன் பிரின்ஸ் மயங்கி விழுந்தது தான் இறந்தான் என்பதற்கான ஆதாரமாக பள்ளி நிர்வாகம் சிசிடிவி பதிவுகளை பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது..