மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆக.,3, 4 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவ், நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் தரவில்லை என்றால் கைது செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
சந்தீப் சிங் யாதவ் கேட்ட தொகையை நகைக்கடை உரிமையாளரால் தர முடியவில்லை. இதனால் ரூ.20 லட்சம் தருமாறு பேரம் பேசியுள்ளார். அந்த ரூ.20 லட்சம் லஞ்ச பணத்தை சந்தீப் சிங் யாதவ் வாங்கியபோது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மதுரையில் டாக்டர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி என்பவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது..