பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டதால், அவருக்குப் பதிலாக மகளிருக்கான 53 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை அண்டிம் பங்கல் கலந்து கொண்டார். நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை ஜெய்நெப் யெட்கில்லிடம் எதிராக 10-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டதால், அவருக்குப் பதிலாக மகளிருக்கான 53 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை அண்டிம் பங்கல் கலந்து கொண்டார். நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை ஜெய்நெப் யெட்கில்லிடம் எதிராக 10-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். அறிமுக ஒலிம்பிக் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த அண்டிம் பங்கலுக்கு, நேற்று மறக்க முடியாத மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. போட்டி நடைபெறும் இடத்திற்கு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கும் நிலையில், அனுமதியை மீறி அவரது தங்கை நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பாதுகாப்பு விதிகளை மீறியதாக ஆண்டிம் பங்கலின் சகோதரியை பாரிஸ் போலீசார் கைது செய்தனர்.
பின்னர், எச்சரிக்கை செய்து அவரை விடுவித்தனர். இதனிடையே, ஒலிம்பிக் விதிகளை மீறியதாக இந்திய வீராங்கனை ஆண்டிம் பங்கல் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவினருக்கான அங்கீகாரத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்தது. இதனால், ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.இதையறிந்த மத்திய அரசு, பங்கல், அவரது பயிற்சியாளர்கள் அனைவரையும் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.அறிமுக ஒலிம்பிக் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த அண்டிம் பங்கலுக்கு, நேற்று மறக்க முடியாத மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. போட்டி நடைபெறும் இடத்திற்கு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கும் நிலையில், அனுமதியை மீறி அவரது தங்கை நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பாதுகாப்பு விதிகளை மீறியதாக ஆண்டிம் பங்கலின் சகோதரியை பாரிஸ் போலீசார் கைது செய்தனர். பின்னர், எச்சரிக்கை செய்து அவரை விடுவித்தனர். இதனிடையே, ஒலிம்பிக் விதிகளை மீறியதாக இந்திய வீராங்கனை ஆண்டிம் பங்கல் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவினருக்கான அங்கீகாரத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்தது. இதனால், ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.இதையறிந்த மத்திய அரசு, பங்கல், அவரது பயிற்சியாளர்கள் அனைவரையும் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.