மீசைய முறுக்கு, கோடியில் ஒருவன், கண்ணை நம்பாதே, திருவின் குரல் உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஆத்மிகா. இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி கோயிலில் 200 ஏழைகளுக்கு கலவை சாதம் அன்னதானம் செய்தார்.
இந்த அன்னதாம் குறித்து நடிகை ஆத்மிகா கூறும்போது, “கடந்த சில நாட்களாக உடல், வேலை மற்றும் மனதைச் சரி செய்வது சிரமமாக இருக்கிறது. நான் எப்போதெல்லாம் இப்படி ஒரு கஷ்டமான நிலையை உணர்கிறேனோ,
அப்போது தேவையானவர்களுக்கு உதவுவதைத் தவறாமல் செய்கிறேன். குறிப்பாக அன்னதானம் செய்துவிட்டு கடவுளிடம் சரணடைந்துவிடுவேன்.
அப்படி செய்யும்போது நினைத்துப் பார்க்க முடியாத வகையில் மனதில் உற்சாகம், மகிழ்ச்சி ஏற்படுகிறது. கொடுத்து உதவுவது மட்டுமே அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை எனக்குச் கற்றுத் தந்த ஒவ்வொருவருக்கும் நன்றி” என்று அவர் கூறினார்.